Publish Date: Thu, 25 Apr 2024 (18:11 IST)
Updated Date: Thu, 25 Apr 2024 (18:12 IST)
தமிழகத்தில் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு சாராய அதிபர்கள் அமைச்சர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் நான்காம் தேதி எண்ணப்படும் நிலையில் ஜூன் நான்காம் தேதி அமைச்சர்கள் சாராய அதிபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச் ராஜா பேட்டியில் தெரிவித்துள்ளார்
சிவகங்கையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என்றும் அவர் பேசிய பேச்சில் முஸ்லிம் என்ற வார்த்தையை ஒரு முறை கூட பயன்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினரை இணைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு சிறை செல்வார்கள் என்றும் அதில் அமைச்சர்கள் இருக்கிறார்களா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.