Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பண உதவி செய்தவர்களுக்கு ஜூன் 4க்கு பின் சிக்கலா? மிரட்டப்படும் தொழிலதிபர்கள்?

பண உதவி செய்தவர்களுக்கு ஜூன் 4க்கு பின் சிக்கலா? மிரட்டப்படும் தொழிலதிபர்கள்?

Mahendran

, சனி, 20 ஏப்ரல் 2024 (09:54 IST)
நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும் படையினர் என்னதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா அமோகமாக நடைபெற்றது என்றும் கடைசி நேரத்தில் ஆளும் கட்சிக்கு பல தொழில் அதிபர்கள் பணத்தை வாரி இறைத்ததாக  கூறப்படுகிறது. 
 
இந்த செய்தியை கேள்விப்பட்ட கமலாலய தரப்பு ஆளுங்கட்சிக்கு யார் யார் பணம் கொடுத்தார்கள் என்ற லிஸ்ட் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு அவர்களுக்கு குடைச்சல் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் ஆளும் தரப்பு இதற்கெல்லாம் அசர போவதில்லை என்றும் இந்த தேர்தலில் பாஜகவுக்கு பணம் கொடுத்த தொழிலதிபர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டை எடுத்து வருவதாகவும் தங்களுக்கு குடைச்சல் கொடுத்தால் பதில் குடைச்சல் கொடுக்க ஆளும் தரப்பும் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
மொத்தத்தில் தேர்தல் முடிந்தாலும் இரண்டு கட்சிகளுக்கு இடையே உள்ள போட்டி மட்டும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் முடிந்தாலும் பறக்கும் படை சோதனை தொடரும்! தேர்தல் ஆணைய அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!