Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாத்தீகம் இருந்தால் தீக்குளிப்பு இருக்கும் - ஹெச்.ராஜா பேட்டி (வீடியோ)

Advertiesment
நாத்தீகம் இருந்தால் தீக்குளிப்பு இருக்கும் - ஹெச்.ராஜா பேட்டி (வீடியோ)
, செவ்வாய், 24 அக்டோபர் 2017 (15:19 IST)
கரூரில் பா.ஜ.க பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையடுத்து, பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கரூரில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வந்தார். 


 

 
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேட்டியில் கூறியதாவது:
 
நடிகர் விஷால் வீட்டில் சோதனை என்பது உப்பு தின்னவன் தண்ணி குடிக்க தான் வேண்டும், இந்த வருமான வரித்துறை சோதனைக்கும் அரசியலுக்கும் சம்பந்தமும் இல்லை, அரசாங்கம் தனது வேலையை சிறப்பாக செய்கின்றது. 
 
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் இன்றுவரை சிறப்பாக நிலைத்திருக்கின்றது. ஆனால் தற்போது கட்டிடங்கள் இடிகின்றது என்றால் காரணம் திராவிட கட்சிகளின் ஆட்சி மற்றும் கமிஷன் வாங்கி கொண்டு கட்டினால் இப்படிதான் இடியும். ஆகவே, திராவிட கட்சிகளின் ஆட்சி எப்போது முடிகின்றதோ அப்போது தான் தமிழகத்திற்கு ஒரு நல்ல விடியல் ஏற்படும், ஆகவே, பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.
 
ஆன்மீகம் நம்பிக்கை தமிழகத்தில் குறைந்ததால் தான் இந்த தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. அடிப்படை அறிவை மழுங்கடிப்பதே நாத்தீகம். பகுத்தறிவு என்ற பெயரில் பெரியாரிடமிருந்து பெறப்பட்டு, அதன் மூலம், வாழ்க்கையில் ஆன்மீகம் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அடியோடு புரட்டி எடுத்து, ஆன்மீகத்தை அடியோடு வேறோடு அடியேறுத்திருப்பதே நாத்தீகமாக இருந்தால் தீக்குளிப்பு இருக்கும். ஆகவே ஆஸ்தீகத்தை வளர்க்க வேண்டும் 
 
நம்பிக்கை இருக்க வேண்டும். துணிச்சல் வேண்டும், ஈ.வே.ராவிடமிருந்து ஒரு ஆற்றல் பெற்று தமிழகத்தை நாசம் செய்வதுதான் இந்த தீக்குளிப்பு சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. 
 
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இது போன்று தீக்குளிப்பு சம்பவங்கள் இருக்காது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தீக்குளிப்பு இருக்கும், ஆகவே ஆன்மீகத்தை வளர்த்து தீக்குளிப்பை கை விட வேண்டும். இந்த தீக்குளிப்பை அடியோடு விட வேண்டுமென்றால் திராவிட கட்சிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அவர் பேட்டியளித்தார்.

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி, கமல், அஜித், விஜய் ரசிகர்களுக்கு ஆப்பு வைத்த சென்னை ஐகோர்ட்