Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமாதி புரட்சி ; ஓபிஎஸ் நம்பர் 1; அழகிரி நம்பர் 2 : ஹெச்.ராஜா கிண்டல்

Advertiesment
சமாதி புரட்சி ; ஓபிஎஸ் நம்பர் 1; அழகிரி நம்பர் 2 : ஹெச்.ராஜா கிண்டல்
, திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (19:34 IST)
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் பா.ஜ.க.சார்பில் சட்டமன்ற தொகுதி ஆய்வுக்கூட்டம் அய்யர்மலை தனியார் மகாலில் நடைபெற்றது. 

 
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலை தனியார் திருமண மகாலில் பா.ஜ.க. சார்பில் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ராமநாதபிள்ளை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. தேசிய செயலர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 
 
இதில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது., செய்தியாளர்களிடம் பேசிய ஹச்.ராஜா., மு.க.அழகரி  கலைஞர் சமாதி முன்பு பேசிய செயலை சமாதி புரட்சி நம்பர் 2,  சமாதி புரட்சி நம்பர் 1 ஒ.பி.ஸ் என கிண்டலடித்தார்.
 
மேலும், பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு எதிரான கூட்டணி எல்லாம் வெறும் கிச்சடி கூட்டம்தான் எனவும், சர்ச்கைகளை கிளப்பிவரும் கோயில் குளருபடிகள் குறித்து சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் ஊடுருவல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்கவேண்டும். இந்தியா மட்டுமில்லாது உலகின் சுப்பர் ஸ்டார் மோடிதான் என ஹெச்.ராஜா அவர்கள் செய்தியார்கள் சந்திப்பில் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக செயற்குழு கூட்டம் அறிவிப்பு - திமுகவிற்கு போட்டியா?