பெண்களின் செல்போனில் உள்ள அவர்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மூலம் திருடி இச்சைக்கு பயன்படுத்தியதோடு, அதை விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தாமரையூரணி கிராமத்தில் வசிப்பவர் தினேஷ்குமார்(24). எம்.சி.ஏ பட்டதாரியான இவர் வீட்டில் இருந்தவாறே செல்போன் பழுதுநீக்கும் பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த இவரின் உறவுக்கார பெண் தனது செல்போனை பழுது நீக்கி தரும்படி கேட்டுள்ளார். அப்போது, ஒரு செயலியை பதவிறக்கம் செய்து அதன் மூலம் அந்த செல்போனில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் உரையாடல் ஆகிய அனைத்தையும் தனது லேப்டாம் மூலம் திருடியுள்ளார். அதன் பின் தான் யார் என்பது காட்டிக்கொள்ளாமல் அந்த பெண்ணை மிரட்டி தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அப்பெண் தன்னுடைய கணவரிடம் கூற, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு தினேஷ்குமாரை செல்போனில் செய்தி அனுப்ப வைத்துள்ளார். அங்கு சென்றதும் தினேஷை கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்தர். அதன்பின், போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் தினேஷ் கைது செய்யப்பட்டார்.
தினேஷின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த லேப்டாப், 3 செல்போன்கள், பெண்கள் அணியும் ஆடைகள் ஆகியவறை கைப்பற்றினர். அதன்பின் தினேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பணிபுரிந்த போதே ஒரு மாணவியின் செல்போனில் இருந்து வீடியோக்களை அவர் திருடி மிரட்டியதும், அப்பெண் கல்லூரி நிர்வாகத்திடம் கூற அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், தன் உறவுக்கார பெண்கள், தோழிகள், சகோதரி என அனைவரின் செல்போனையும் வாங்கி அவர்களுக்கு தெரியாமல் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து தனது மடிக்கணினி மூலம் தகவல்களை திருடி மிரட்டி வந்துள்ளார்.
அதில் சில பெண்கள் அவரின் இச்சைக்கு இணங்கியுள்ளனர். அப்பெண்களின் ஆடைகளைத்தான் அவர் வீட்டில் சேகரித்து வைத்துள்ளார். அதோடு, ஆசைக்கு இணங்காத பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிநாட்டில் உள்ள இணையதளங்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம், தினேஷின் உறவுக்கார பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு தெரிந்தவர்களாக இருந்தாலும், ஆண்களிடம் செல்போனை கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை செய்துள்ளனர்.