Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியாணிக்காக பாக்சிங் போட்ட யுவராஜ் யார் தெரியுமா? : அதிர வைக்கும் பின்னணி

Advertiesment
Yuvaraj
, வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (11:13 IST)
இலவச பிரியாணிக்காக கடை ஊழியர்களை தாக்கிய யுவராஜ் பல கட்சிகளில் நிர்வாகியாக இருந்தது தெரியவந்துள்ளது.

 
சென்னை விருகம்பாக்கத்தில் இலவச பிரியாணிக்காக திமுக நிர்வாகி யுவராஜ் நடத்திய குத்து சண்டைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் முக்கிய செய்தியாக இருக்கிறது. யுவராஜின் செயலை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.அதோடு, ‘ஓசிபிரியாணிதிமுக’ என்கிற ஹேஷ்டேக் நேற்று டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது
.
யுவராஜ் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகியாக இருக்கிறர். இந்த விவகாரம் பூதாகரம் ஆனதால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக திமுக தரப்பு அறிவித்துள்ளது.

 
இந்நிலையில், திமுக கட்சிக்கு வருவதற்கு முன் அவர் இந்து முன்னணி, பாஜாக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளில் நிர்வாகியாக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பான போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
வடபழனி பகுதியில் வசித்து வந்த யுவராஜ், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் போதே உள்ளூர் ரவுடிகளுன் சகவாசம். சில காலங்கள் உடல் பயிற்சி மையம் ஒன்றையும அவர் நடத்தி வந்துள்ளார். ஜிம்மில் பயிற்சி பெரும் ரவுடிகளுடன் சேர்ந்து கொண்டு அவ்வப்போது பலருடன் தகராறில் ஈடுபடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார். அதன் பின் கோடம்பாக்கம் ஸ்ரீ என்கிற ரவுடியுடன் ஏற்பட்ட தொடர்பில் அவருக்கு நெருக்கமானார். கோடம்பாக்கம் ஸ்ரீ நடத்தி வரும் தமிழ்நாடு இந்து மகாசபா என்ற அமைப்பில் சில வருடங்கள் இருந்துள்ளார் பிரியாணி யுவராஜ். ரவுடி ஸ்ரீ ஜீ.கே. வாசனுக்கு நெருக்கமான போது, யுவராஜ் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 

 
ஆனால், போலீசார் ரவுடி ஸ்ரீயை நெருக்கிய போது, அவருடன் இருந்தால் இனி வேலைக்கு ஆகாது என கணக்குப்போட்ட யுவராஜ் 2016ம் ஆண்டு தேர்தலின் போது திமுகவில் சேர்ந்துள்ளார். அதன் பின் கட்டப்பாஞ்சாயத்து செய்வதையே தன் தொழிலாக கொண்டு சுற்றி வந்துள்ளார். எப்போதும், எடுபிடிகளுடன் நான்கைந்து வாகனங்களில் சென்று யுவராஜ் பந்தா காட்டுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்தான், இலவச பிரியாணிக்காக சண்டை போட்டு திமுகவின் மானத்தை அவர் கப்பல் ஏத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதியின் உடல் நிலையை விசாரித்த கவுண்டமணி.....