துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயன்றதாக நேற்று புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் மூன்று இரு சக்கர வண்டிகளில் 6 பேர் வந்து குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயன்றது தெரியவந்தது
இதனை அடுத்து காவல்துறை உயரதிகாரிகள் அடுத்த இரண்டு மணி நேரத்தில் குருமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவரது பாதுகாப்பை உறுதி செய்வதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்
இந்த நிலையில் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியபோது, இந்த விவகாரத்தில் காவல்துறையினர் இரண்டு பேர்களை கைது செய்து இருப்பதாகவும் அவர்கள் தமிழ் தீவிரவாதிகள் என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்
மேலும் நான் புகார் அளித்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் காவல் துறை உயரதிகாரிகள் வீட்டிற்கே வந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்ததற்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார் மேலும் துக்ளக் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்
கைதுசெய்யப்பட்ட இருவர் யார்? அவர்களிடம் என்ன எந்தவிதமான விசாரணை நடந்து வருகிறது என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது