உப்புக்கு பெயர் பெற்ற தூத்துகுடிக்கே உப்பு இறக்குமதி!
தூத்துக்குடி என்றாலே உப்பளங்களுக்கு பெயர் போனது என்பதும், தூத்துக்குடியில் தான் பல உப்பளங்களில் உப்பு தயாரிக்கப்படுகிறது என்பதும், அங்கிருந்து பல மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் தற்போது தூத்துக்குடிக்கே உப்பு இறக்குமதி செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி முதல் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி இல்லாததால் உப்புக்கு பெயர் பெற்ற தூத்துக்குடியில் குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்புகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டு அதன் பிறகு பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதால் உப்பின் விலை நான்கு மடங்கு விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது