Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்த் உடலுக்கு துப்பாக்கியை உயர்த்திப் பிடித்து காவலர்கள் மரியாதை

Advertiesment
vijayakanth -police station
, வியாழன், 28 டிசம்பர் 2023 (17:35 IST)
தமிழ் சினிமாவின் பிரபல  நடிகரும், தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடையட்டும்; அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், மற்றும் அனைவருடனும் எனது இதயம் சொல்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சினிமாவில் காவல்துறைக்கு தனி மரியாதை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். அவை மக்கள் மனதில் மட்டுமின்றி காவலர்கள் மனதிலும் பதிந்துள்ளது.
webdunia

இன்று விஜயகாந்தின் உடல் விருகம்பாக்கம் காவல் நிலையம் வழியாக கொண்டு செல்லப்பட்டபோது, காவல்துறையினர் உயர்த்தி பிடித்து மரியாதை செலுத்தினர்.

 நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறைப்பு: மத்திய அரசு தகவல்..!