இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற பிரதமர் மோடியுடன் வலியுறுத்தினேன் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமரிடம் நான் கேட்டுக் கொண்டேன். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் கோரிக்கை விடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்,ஜிஎஸ்டி வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், 3வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமெனவும், உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஒன்றிய அரசு மைக்க வேண்டுமெனவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.