Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 10 January 2025
webdunia
Advertiesment

குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து தாத்தா, பட்டி கொலை- பேரன் கைது!

குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து தாத்தா, பட்டி கொலை- பேரன் கைது!
, செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:59 IST)
விழுப்புரம் மாவட்டம் பில்லூர் கிராமத்தில்,  பேரன் ஒருவர்  தனது தாத்தா, பாட்டிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அருகேயுள்ள  பில்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கலுவு என்ற ஆறுமுகம். இவரது மனைவி மணி. இந்த தம்பதியர்க்கு  3  மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலைய்ய்ல்,  மூத்த மகன் முருகன் என்பவர் கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகிலுள்ள காடாம்புலியூரில் வசிக்கிறார்.

முருகனின் மகன் அரருள்சக்தி(19) நேற்று மாலை பில்லூர் கிராமத்திற்கு வந்தார். மதுபோதையில் இருந்த அவர்  தன் தாத்தா, பாட்டி வீட்டிற்க்யுகுச் செல்லும்போது, உணவு மற்றும் குளிர்பானம் வாங்கிச் சென்றார்.

குளிர்பானத்தில் விஷம் கலந்த அருள்சக்தி, அதை தாத்தா, பாட்டிக்கு கொடுத்து கட்டாயமாகக் குடிக்கவைத்து, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்,.

பின்னர், வீட்டிற்குச் சென்று தன் தந்தையிடம் உன் அப்பா- அம்மாவை கொலை செய்துவிடுவதாகக் கூறியுள்ளார்.  இதையடுத்து, பில்லூரில் உறவினர்கள் சென்று வீட்டில் பார்க்கும்போது,.  ஆறுமுகம் மற்றும் அவரதுமனைவி  மனைவி சடலமாகக் கிடந்துள்ளனர்.
இதுகுறித்து, போலீஸார்  வழக்குப் பதிவு செய்து அருள்சக்தியை தேடி வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்- அண்ணாமலை