தமிழகத்தில் 1,000 பேருந்துகள் வாங்க ரூபாய் 420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,000 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் இதர கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு தலா ரூபாய் 42 லட்சம் என மதிப்பீடு செய்து மொத்தம் 420 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
இதன்படி விழுப்புரம், மதுரை, சேலம், கோவை, கும்பகோணம், நெல்லை ஆகிய மாவட்டத்திற்கு புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.