இன்று தொடங்கி நடந்துவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆளுநர் இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடப்பு ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் தொடங்க இருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் வகையில் இந்த கூட்டத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையாற்ற தொடங்கிய போது திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து பேசிய ஆளுநர் மத்திய அரசின் பட்ஜெட் மூலம் தமிழகத்துக்கு 1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்த அவர் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.