சமீபத்தில் தமிழக அரசு 2 வது மனுவை ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடந்து வருகிறது.
இதில், 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், ''தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை'' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், ''காரணம் எதுவும் கூறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்களை மீண்டும் பேரவை நிறைவேற்றி அனுப்பியதால் அவற்றிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். காரணம் எதுவும் கூறாததால் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் ஆளுநரால் அனுப்பிவைக்க முடியாது.
காரணத்தோடு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தால் மட்டுமே மீண்டும் திருப்பி அனுப்பும்போது, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்'' என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.
எனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.