Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டசபை முடக்கம்? ஜனாதிபதி ஆட்சி? - ஆளுநரின் திட்டம் என்ன?

Advertiesment
சட்டசபை முடக்கம்? ஜனாதிபதி ஆட்சி? - ஆளுநரின் திட்டம் என்ன?
, சனி, 23 செப்டம்பர் 2017 (11:44 IST)
பரபரப்பான சூழ்நிலையில் வருகிற 25ம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வர இருக்கிறார்.


 

 
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபால், கொறடா ராஜேந்திரன், ஆளுநர் வித்யாசாகர் ராவ் என அனைவரின் தலையும் உருண்டு கொண்டிருக்கிறது. 
 
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஆக்டோபர் 4ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது, மேற்கூறிய அனைவரின் தரப்பிலிருந்தும் விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
 
இந்த விவகாரத்தில் தன்னிடம் ஆலோசிக்காமல், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சிக்கலை ஏற்படுத்திவிட்டார்கள் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்கனவே எடப்பாடி மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தமிழகத்தில் சட்டசபையை முடக்கி விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது குறித்து, மகாராஷ்டிரா மாநிலம் வந்துள்ள ஜனாதிபதியோடு நேற்று ஆளுநர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், வருகிற 25ம் தேதி சென்னை வருகிற ஆளுநர் ஒரு அதிரடி முடிவை எடுப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும், அதற்காக மத்திய அரசு தன்னை தமிழக பொறுப்பு ஆளுநர் பதவியிலிருந்து விடுவித்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சையில் முடிந்த மணமகள் சாதனை