Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டு வாரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: சுப்பிரமணியன் சுவாமி ஆருடம்!

இரண்டு வாரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: சுப்பிரமணியன் சுவாமி ஆருடம்!

Advertiesment
இரண்டு வாரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி: சுப்பிரமணியன் சுவாமி ஆருடம்!
, புதன், 20 செப்டம்பர் 2017 (08:37 IST)
தமிழக அரசியலில் குழப்பமும், பரபரப்பும் நிலவி வருவதால் அடுத்தடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


 
 
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர்வதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கடிதமும் அளித்துள்ளனர். இந்நிலையில் அந்த 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்தார்.
 
இதனை பல்வேறு கட்சியினர் எதிர்த்து வருகின்றனர். இது அரசியல் சாசனத்துக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது குறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் உள்ளது. அதன் விசாரணை இன்று வர உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார்.
 
இந்நிலையில் நேற்று தமிழக அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, முதல்வர் மீது நம்பிக்கை இல்லாததால் அவரை மாற்ற வேண்டும் என எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
 
ஆனால், சபாநாயகர் அந்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இந்த தகுதி நீக்கம் சட்டப்படி செல்லாது. 18 பேரும் கட்சியை விட்டு விலகவில்லை. கொறடாவின் உத்தரவையும் மீறவில்லை. எனவே ஆளுநர் சட்டப்படி செயல்பட்டு முடிவெடுக்க வேண்டும்.
 
தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். எம்எல்ஏக்களின் தகுதி நீக்க விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்கும் வரையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கூடாது என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டிடங்கள்