Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் குடியரசு தினவிழா: கவர்னர் கொடியேற்றினார்

சென்னையில் குடியரசு தினவிழா: கவர்னர் கொடியேற்றினார்
, ஞாயிறு, 26 ஜனவரி 2020 (08:30 IST)
இந்தியா முழுவதும் இன்று 71வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று காலை சென்னையில் குடியரசு தின விழாவையொட்டி மெரினாவில் மூவர்ண கொடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கலந்து கொண்டார். மேலும் சென்னை மெரினா காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். 
 
முன்னதாக குடியரசு தினவிழாவை ஒட்டி நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை என நவீன இந்தியாவின் மூன்று முக்கிய அங்கங்கள், ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவை என்றார். அடிப்படையில் மக்கள் தான் குடியரசை வழிநடத்தி செல்கிறார்கள் என்றும், எதிர்காலத்தை முடிவு செய்வதற்கான உண்மையான அதிகாரம் மக்களிடமே இருக்கிறது என்று கூறினார்.
 
மேலும் காந்தியின் உண்மை மற்றும் அஹிம்சையை தினசரி வாழ்க்கையில் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசுத் தலைவர், நல்ல விஷயத்திற்காக போராடும் போது வன்முறையில் ஈடுபடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அரசியலமைப்பு சட்டம் குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்கியிருக்கிறது என்றும், அதே சமயம் ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை பேணும் வகையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் அவர்களின் இன்றைய தமிழ்க்கொலை: தமிழக அமைச்சரின் டுவீட்