மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இன்றைய இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும் என குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார்.
1950 ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அதில், “ மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இன்றைய இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ளவேண்டும் “ என கூறியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடந்த பல இடங்களில் வன்முறை வெடித்த நிலையில் தற்போது குடியரசு தலைவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.