காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி 55 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற அரசு பேருந்து தாழம்பேடு அருகே உள்ள மேம்பாலத்திற்கு முன்பாக வளையும் போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் உள்ள 20 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரழந்தார். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.