Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின் தடையால் மருத்துவமனையில் 21 நோயாளிகள் பலி

மின் தடையால் மருத்துவமனையில் 21 நோயாளிகள் பலி

Advertiesment
மின் தடையால் மருத்துவமனையில் 21 நோயாளிகள் பலி
, ஞாயிறு, 24 ஜூலை 2016 (21:02 IST)
மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 21 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.


 
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து பலமுறை மின்தடை ஏற்பட்டது. இந்த மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டால் அதை சமாளிக்க 4 பெரிய ஜெனரேட்டர்கள் உள்ளன. ஆனால் மின்சாரம் விட்டுவிட்டு வந்ததால் என்ன காரணத்துக்காக மின்தடை ஏற்படுகிறது என்பதை கண்டு பிடிப்பதற்காக ஜெனரேட்டர்கள் இயக்கப்படவில்லை.

இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அறுவை சிகிச்சை பிரிவு சாதனங்கள், பிரசவ வார்டில் உள்ள சாதனங்கள், செயற்கை சுவாச சாதனங்கள், மருத்துவ சாதனங்கள், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள சாதனங்கள் செயல்படவில்லை. இதனால் அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் 21 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்துல் கலாமின் வெளிவராத கடிதம்