Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசுகலைக்கல்லூரியில் அத்துமீறலா....மெளனம் காக்கும் அரசு கலைக்கல்லூரி முதல்வர்

karur
, வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (23:14 IST)
கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் துறை (பொ) ஜாகீர் உசேனுக்கு கல்லூரி முதல்வர் கொளசல்யா தேவி, தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் வரும் கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்பு அடிப்படை விதியை மீறி தாவரவியல்துறையில் பணியாற்றும் ஆசிரியர் ஜாகீர் உசேனை, 7 வது இடத்தில் உள்ள அவருக்கு, துறைத்தலைவர் பதவி கொடுத்தது செயல் மிகுந்த தவறு, மேலும் 2 வது இடத்தில் உள்ள சீனியர் பேராசிரியருக்கு மட்டுமே இந்த இடம் கொடுக்க பட வேண்டுமென்று அரசு விதி தெளிவாக சொல்லும் பட்சத்தில், கல்லூரி முதல்வர்., உயர்கல்வித்துறை விதியை தவறாக பயன்படுத்தியுள்ளார்.

இது சம்பந்தமாக கல்லூரி ஆட்சி மன்ற குழுவில் எந்த தீர்மானமும் இது குறித்து நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக தாவரவியல் துறையில் உள்ள 2 வது சீனியருக்கு இந்த ஊட்டச்சத்து துறை (பொ) வழங்க வேண்டுமென்றும் மாணவர்கள் சார்பில் மனு அளித்தும் கல்லூரியின் முதல்வர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
ஜாகிர் உசேன் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், ஒருமையில் பேசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதை பெருமளவில் வருத்தம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து ஜாகிர் உசேன் கல்லூரியில் கல்லூரி சாலையில் மரத்தை தூக்கி போட்டு கல்லூரிக்குள் சாலையில் செல்லும் சாலையை மறைத்த விஷயமே தற்போது பூதாகரமாகி வரும் நிலையில், கல்லூரிக்குள் பைக்கில் வேகமாக செல்லும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல்துறை கூறிய நிலையில், அதைவிட்டு விட்டு, கல்லூரி சாலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் உள்ளிட்ட பிற மாணவர்கள் ஆசிரியர்கள் செல்வதற்கு அந்த சாலை உள்ள நிலையில், அந்த சாலையில் மரங்களை போட்டு நிரந்தரமாக தடுப்பது முறையற்ற செயல் என்று மாணவ சமுதாயமும், நடுநிலையாளர்களும் தெரிவித்துள்ளனர். 
 
ஜாகீர் உசேன் மீது பல்வேறு துறை மாணவர்கள், மதரீதியாக செயல்படுவதாக கூறி பலமுறை மனு அளித்துள்ளதாகவும் அவர் மீது எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்பதும் தெரியவருகின்றது. அதற்கு புகார் கொடுத்த மாணவர்களை கல்லூரி முதல்வரே மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், கல்லூரி முதல்வர் கொளசல்யாதேவி திமுக ஆட்சியில் பொறுப்பேற்றும் எந்த வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்பதும் கூடுதல் தகவலாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைப்பு- தேர்தல் ஆணையம் அறிவிப்பு