Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக, திமுகவைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகி பாஜக வில் ஐக்கியம்

karur
, திங்கள், 13 பிப்ரவரி 2023 (22:30 IST)
கரூர் மாவட்ட தலைவர் விவி செந்தில்நாதன் அனிவரையும் பொன்னாடை அணிவித்து கட்சியில் இணைத்து கொண்டார்.
 
 
கரூர் மாவட்டம், தாந்தோன்றி கிழக்கு ஒன்றியம் உப்பிடமங்கலம் பகுதியை சார்ந்த திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சுமார் 80 க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து வெளியேறி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தாந்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய தலைவர் பாலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட செயலாளர் விக்டோரியா வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.

மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றமடைந்து மக்கள் எழுச்சியோடு பாஜக கட்சியில் இணைந்து வருவதை எடுத்து கூறிய மாவட்ட தலைவர் விவி.செந்தில்நாதன், வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் இந்திய அளவில் தமிழகம் மிகப்பெரிய எழுச்சி பெறும் என்றும் அதற்கு அண்ணாமலை அவர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் கட்சியில் இணையும் நிர்வாகிகள் திமுக அரசின் அவலநிலையை எடுத்து கூறினாலே போதும் என்றும் மத்தியில் பாஜக ஆளும் அரசின் சாதனைகளையும் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்ல வேண்டும், இது மட்டுமில்லாமல், கரூர் மாவட்டம் பாஜக வின் எக்கு கோட்டையாக நிருபிக்க வரும் தேர்தல் நமக்கு பாடமாக நினைத்து, அதற்காக அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் மாவட்ட தலைவர் விவி.செந்தில்நாதன் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்லடத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு குறை கேட்பு கூட்டம்!