Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரகசியக் கேமரா எதிரொலி –பெண்கள் விடுதிக்குப் புதிய கட்டளைகள்

ரகசியக் கேமரா எதிரொலி –பெண்கள் விடுதிக்குப் புதிய கட்டளைகள்
, வியாழன், 6 டிசம்பர் 2018 (07:46 IST)
பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு விடுதி உரிமையாளர் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலையில் பெண்கள் விடுதிக்குப் பல புதிய விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளர்.

சமீபத்தில் ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் மிகச்சிறிய அளவிலான கேமராக்களை குளியல் அறையில் வைத்து ரகசியமாக வீடியோ எடுத்த விடுதி உரிமையாளர் சஞ்சீவ் என்பவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனியாக சென்னையில் வசிக்கும் பெண்கள் மத்தியில் பெரும் பயமும் அதிர்ச்சியும் உருவாகி உள்ளது. இதனையடுத்து பெண்களுக்கான பாதுகாப்பை அளிக்கும் பொருட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதி நடத்துவதற்கு  மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. உரிய அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே விடுதி, காப்பகத்தினை நடத்த வேண்டும்.
2. ஆண், பெண் இருபால் தங்குமிடமாக இருப்பின் ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனி கட்டிடம் அமைக்க வேண்டும், தவிர்க்க இயலாத நிலையில் தனித்தனி அறைகளில் தங்க வைக்க வேண்டும்
3. பெண்கள் விடுதியாக இருப்பின் அதன் வார்டனாக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்
4. 50 குழந்தைகளுக்கு ஒரு வார்டனும். 24 மணி நேரம் பாதுகாவலரும் நியமிக்கப்பட வேண்டும்.
5. ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருப்பின் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்புக்கு செக்யூரிட்டிகளை நியமனம் செய்ய வேண்டும்.
6. 50-க்கும் மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களின் வாயில்களில் சிசிடிவி கேமரா, வீடியோ ரெக்கார்டர் கேமரா பொருத்தப்பட வேண்டும்.
7. விடுதிக்காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர் இருவரில் யாராவது ஒருவர் எந்நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
8. விடுதியில் உள்ள பாதுகாவலர்கள் அவசர காரணமேதுமின்றி விடுதிக்கட்டடங்களுக்குள் செல்லக்கூடாது,
9. அமைவிடம் நான்குபுற சுற்றுச்சுவர்களுடனும். உள் மற்றும் வெளியே செல்லும் வாயில்களில் தாழ்ப்பாளுடன் கூடிய விடுதிகள் அமைத்து விடுதியில் தங்கியிருப்பவர்கள் வெளிச் செல்லும் நேரம். உள்ளே வரும் நேரம் ஆகியவற்றை தினசரி வருகைப் பதிவேட்டில் பதிய வேண்டும்,
10. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கண்காணிப்பாளர் முன்னிலையில் பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களை வரவேற்பறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும், இளம் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களை காண வரும் பார்வையாளர்களின் சந்திப்பு கண்டிப்பாக விடுதிக்காப்பாளர் முன்னிலையில் நடைபெற வேண்டும்,
11. சிறு வயது குழந்தைகள் மற்றும் இளம்பெண்களை விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அனுப்பும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் மட்டுமே அனுப்ப வேண்டும்,
12. பார்வையாளர் புத்தகம் ஒன்றை விடுதிக்காப்பாளர் பராமரித்து. பார்வையாளர் பெயர். முகவரி. உறவுமுறை மற்றும் சந்திப்பிற்கான காரணம் ஆகியவற்றை பதிந்து பார்வையாளர் ஒப்பம் பெற்று, விடுதிப்பணியாளரால் மேலொப்பம் இடப்படவேண்டும்,
13. விடுதிக்காப்பாளர், பாதுகாவலர், பெற்றோர் ஆகியோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்,
14. விடுதிக்காப்பாளர் மற்றும் பாதுகாவலர் தொலைபேசி எண் மற்றும் முகவரியை காப்பகத்தின் முன்வாயிலில் வைக்க வேண்டும்
15. விடுதிக்காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களின் முந்தைய நன்னடைத்தைச் சான்றினை உள்ளூர் காவல்துறையில் பெற்றும். அவர்களின் உடல் நலம் குறித்து அரசு மருத்துவமனையில் சான்று பெற்றும், 55 வயதிற்குட்பட்ட நபர்களை பணியில் நியமித்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுவனை ஆசைக்காட்டி அழைத்துச் சென்ற பெண் – போக்ஸோ சட்டத்தில் கைது