Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகையின் திருமணத்திற்கு செல்லும் மோடியால், தமிழகத்திற்கு வர முடியாதா?

நடிகையின் திருமணத்திற்கு செல்லும் மோடியால், தமிழகத்திற்கு வர முடியாதா?
, வியாழன், 6 டிசம்பர் 2018 (07:13 IST)
நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லும் மோடி கஜா புயலால் சீர்குலைந்து போயிருக்கும் எம் தமிழக மக்களை இன்னும் பார்க்க முடியவில்லை.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. அங்கு இருக்கும் எம் விவசாய பெருமக்கள் கிட்டதட்ட 20 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். ஆடு, மாடுகளை இழந்து தென்னை, பலா, வாழை, பனை மரங்கள் வேரோடு அழிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது இந்த கஜா புயல். மின்சாரத்தை பார்த்து 20 நாட்கள் ஆகிவிட்டது. மக்கள் இருக்க இடமின்றி தவித்து வருகின்றனர்.
webdunia
ரூ. 15,000 கோடி நிவாரண உதவி கேட்டால், பிச்சைக்காரர்களுக்கு போடுவது போல 380 கோடியை ஒதுக்கியுள்ளது இந்த மோடி அரசு. புயல் ஏற்பட்டு 20 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் பிரதமர் மோடியால் இன்னும் எம் தமிழக மக்களை வந்து பார்க்க முடியவில்லை. என்ன செய்வது அவருக்கு வெளிநாட்டிற்கு செல்லவும், தேர்தல் பரப்புரைகளை மேற்மொள்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. இவர்களுக்கு ஓட்டு தானே முக்கியம், மக்களின் நலனை விட..
 
இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் ஒரு நடிகையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று குலுங்கு குலுங்கி சிரிக்கும் மோடிக்கு இங்கு எம் விவசாய மக்கள் அழுதுகொண்டிருப்பது தெரியவில்லையா? உங்களுக்கு ஓட்டு வேண்டுமென்றால் இங்கு பதறியடித்து ஓடி வருவீர்கள். ஒரு நாட்டின் பிரதமரே இப்படி பொறுப்பற்று நடந்து கொண்டால் எப்படி?  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் நெல் ஜெயராமன் காலமானார்