கடந்த வாரம் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று பங்குச்சந்தை படுமோசமாக விழுந்தாலும் அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி செய்த பின்னர் பங்குச்சந்தை உயர்ந்தது என்பதும் இதனால் நஷ்டம் அடைந்த முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 112 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 85 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 350 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.