தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நேற்று மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்கம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியானது.
அதில், குழந்தைகளுக்கான இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009ன்படி 2021-22 ஆம் ஆண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் நலிவடைந்த பிரிவினர்களின் குழந்தைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வருவதால் வரும் ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரைஉ rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை பெறப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரங்கள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி மாலையில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.