தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள் பல செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாநில பாடத்திட்டங்களில் உள்ள மாநிலங்கள் சிலவும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின் தேர்ச்சி அறிவித்தன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் விவரம் பின்வருமாறு...
தேர்வு மற்றும் விகிதம்
1. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) - 50%
2. 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை (மதிப்பெண் மட்டும்) - 20%
3. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு / அக மதிப்பீடு (internals ) - 30% - இவற்றில் அடிப்படையில் மதிப்பீடு செய்யும்படி கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையை வகுத்து ஜூலை 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்., அவருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகார்கள் ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர்.