Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலியாகும் தமாகா கூடாரம்: அதிமுகவில் ஐக்கியமாகும் ஞானதேசிகன்?

Advertiesment
காலியாகும் தமாகா கூடாரம்:  அதிமுகவில் ஐக்கியமாகும் ஞானதேசிகன்?
, வெள்ளி, 29 ஜூலை 2016 (17:39 IST)
சட்டமன்ற தேர்தல் தோல்வி யாருக்கு பாதகம் ஏற்படுத்தியதோ இல்லையோ தேமுதிக,தமாகவிற்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமாகா,தேமுதிக ஆகிய கட்சிகள் தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தன. அந்த தேர்தலில் இரு கட்சிகளுமே டெபாசிட் இழந்து தோல்வியை தழுவின.


 


இதையடுத்து இரு கட்சிகளிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டனர். தமாகாவில் முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அதிமுகவில் ஐக்கியமாகி எம்.பி.யும் ஆகி விட்டார்.  இவரையடுத்து ஞானசேகரன் எனபவர் சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்தார்.

இந்நிலையில் தமாக முக்கிய நிர்வாகியும், காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவருமான ஞானதேசிகனும் அதிமுகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையில் மீன்பிடித்த இளைஞர்கள் (வீடியோ)