Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் நலக்கூட்டணிக்கு ஜி.கே.வாசன் முழுக்கு

மக்கள் நலக்கூட்டணிக்கு ஜி.கே.வாசன் முழுக்கு

Advertiesment
மக்கள் நலக்கூட்டணிக்கு ஜி.கே.வாசன் முழுக்கு
, திங்கள், 20 ஜூன் 2016 (15:10 IST)
மக்கள் நலக்கூட்டணிக்கு தமாகா முழுக்கு போடப்போகிறது.
 

 
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன், தாமாக கூட்டணி அமைத்து 26 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.
 
இந்த நிலையில், தமாகா தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இனி வரும் காலங்களில் தமாகாவை வலுப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் இருக்கும்.
 
தமிழகத்தில், 32 வருவாய் மாவட்டங்களை 12 மண்டலங்களாக பிரித்து,12 மண்டலங்களிலும், இம்மாதம் 27ம் தேதி முதல், சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன்.
 
அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணி பற்றி கருத்து கேட்கப்படும். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்யப்படும் என்றார்.
 
தஞ்சை, திருவாரூர், நாகை மண்டலத்தில் இருந்து சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 
அவரது இந்த பேச்சு, மக்கள் நலக் கூட்டணியில் இருந்த தமாகா வெளியேறும் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் இல்லனா எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் : அடம்பிடிக்கும் நடிகர்