Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் இல்லனா எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் : அடம்பிடிக்கும் நடிகர்

Advertiesment
அமைச்சர் இல்லனா எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் : அடம்பிடிக்கும் நடிகர்
, திங்கள், 20 ஜூன் 2016 (14:50 IST)
அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால், கன்னட நடிகர் அம்பரீஷ் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கரநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒப்புதலின் படி, கர்நாடக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதில், 14 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
 
பதவி பறிக்கப்பட்டவர்களில் அம்பரீஷும் ஒருவர்.  இவர் நடிகராக இருந்து, பின் காங்கிரசில் இணைந்து தற்போது வீட்டு வசதி அமைச்சராக இருந்தார். இவர், தனது பணியில் சரியாக செயல்படவில்லை என்று கூறி அவரின் பதவி பறிக்கப்பட்டது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், தன்னுடைய பதவி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தன்னுடையை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  ஆனால் அவரின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. 
 
காங்கிரஸ் மேலிடம் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொந்தளித்த விஜயகாந்த்: நீங்க கிளம்புங்க, நான் பார்த்துக்கிறேன்!