Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு பயம்!; ரிசல்ட் வரும் முன்னே மாணவி தற்கொலை! – சங்கரன்கோவிலில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (10:10 IST)
நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தோல்வி பயத்தால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவநுழைவு தேர்வான நீட் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மகள் ராஜலெட்சிமி நீட் தேர்வு எழுதியுள்ளார். ஏற்கனவே இரண்டு தடவை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த அவர் மூன்றாவது முறையாக தேர்வு எழுதியுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில் வினாத்தாளுக்கான விடைகள் உள்ள கீ பேப்பர் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்த மாணவி தனக்கு அதிகமான மதிப்பெண்கள் கிடைக்காது என வருந்தியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மூன்று முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாது என விரக்தியடைந்த மாணவி ராஜலெட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 65 வயது முதியவருக்கு என்ன தண்டனை? தீர்ப்பு விவரம்..!

100 ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கொடுங்க.. சாலையோர வியாபாரியிடம் காசு கொடுத்து வாங்கிய ஈபிஎஸ்..!

பிலாவல் புட்டோ ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல.. தீவிரவாதியின் மகன் பேட்டியால் பரபரப்பு..!

மத்தியில் வலுவான ஆட்சி.. மாநிலத்திலும் தீய சக்தி அகற்றப்படும்: பிரச்சாரத்தை தொடங்கிய ஈபிஎஸ்..!

நோபல் பரிசை வாங்கிவிடுவாரே.. டிரம்ப் பெயரை பரிந்துரை செய்த இஸ்ரேல் பிரதமர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments