தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவில் நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
தொழிலதிபரும், ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தருமான சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி பாஜகா தேசிய பொதுச் செயலாளரும், தமிழகத்திற்கான பொறுப்பாளருமான சி.டி.வி.ரவி முன்னிலையில் பாஜக கட்சியின் இணையவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகிறது.
இத்னால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனுக்கு நெருங்கியவர்கள் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் மற்றும் இளையமகன் பிரபு இருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.