Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து: நேரில் ஆறுதல் கூறிய நடிகை கவுதமி!

சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து: நேரில் ஆறுதல் கூறிய நடிகை கவுதமி!
, வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:13 IST)
சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து: நேரில் ஆறுதல் கூறிய நடிகை கவுதமி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இயங்கிவந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது சோகமான சம்பவமாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ,காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை கௌதமி பட்டாசு விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார். இது குறித்த புகைப்படங்களுடன் கூடிய பதிவை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அச்சங்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிவகாசி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். மேலும் அவர்கள் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். 
 
உயிர் இழந்த தொழிலாளர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்கவும் தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கவும் உடனடியாக ஒப்புதல் அளித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளுக்கு சீர்வரிசை வாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்ட தாய்: சென்னையில் பரபரப்பு