நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றே பூக்களின் விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது.
நாளை விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மக்கள் பலரும் கோவில்கள், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைக்க தயார் செய்து வருகின்றனர். வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக ஏற்பாடு ஆகி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதால் விலையும் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் வரை கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ தற்போது அதிரடியாக விலை உயர்ந்து கிலோ ரூ.1500 முதல் ரூ.1800 வரை விற்பனையாகி வருகிறது. அதுபோல ரூ.150க்கு விற்கப்பட்ட அரளிப்பூ ரூ.200 ஆகவும், ரூ.400 க்கு விற்கப்பட்ட அல்லிப்பூ ரூ.800 ஆகவும், ரூ.400க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.800 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.