செப்டம்பர் 18ஆம் தேதி தமிழகம் உள்பட நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் 45 வழிகாட்டி நெறிமுறைகளை ஈரோடு காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், இந்து மத அமைப்பினர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்பது அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் இருந்தால் தீ விபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஐந்து பேர் கொண்ட சிலை பாதுகாப்புக்கு உருவாக்க வேண்டும் என்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் ஆயுதங்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டது.
மொத்தம் 45 வழிகாட்டு நெறிமுறைகளை விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது விழா குழுவினர் பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.