Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமா? சுற்றறிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம்!

Advertiesment
Ganesha statue

Prasanth Karthick

, வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:22 IST)

நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி நடைபெறும் நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

 

நாடு முழுவதும் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பல பகுதிகளிலும் மக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபடுவதும் சில நாட்கள் கழித்து நீர்நிலைகளில் கரைப்பதும் வழக்கமாக உள்ளது.

 

இந்நிலையில் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை பள்ளிகளில் கொண்டாடப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் மேற்குறிப்பிட்ட தகவல் பொய் என கூறப்பட்டுள்ளது.

 

விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத முறையில் கொண்டாடும் பொருட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 10 உறுதிமொழிகளை மாணவர்கள் எடுக்க வேண்டும் என பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில், அது விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான சுற்றறிக்கை என தவறாக பரப்பப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஆண்டு மிலாது நபி தினம் இதுதான்: தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு..!