Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்? முதல்வருக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் விபரங்கள்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:15 IST)
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து நெருங்கி வரும் நிலையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் என்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் இந்த ஆலோசனையின் போது முதல்வருக்கு சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
அது மட்டுமின்றி தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்தவும் சுகாதாரத் துறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தவும் சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை மூடவும், கடைகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கவும் முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது இது குறித்த விரிவான அறிவிப்பு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments