நாளை முதல் வழக்கம் போல ரயில்கள் இயங்கும்: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (20:04 IST)
நாளை காலை முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
இன்று காலை திடீரென சென்னை மெட்ரோ ரயில் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆங்காங்கே மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் சுரங்க பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
 
 இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு இரவு பகலாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் இரவுக்குள் கோளாறு செய்யப்பட்டு நாளை காலை முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளத்.
 
சென்னையின் வரப்பிரசாதமாக கருதப்படும் மெட்ரோ ரயில் ஒருநாள் இயங்கவில்லை என்பதால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments