Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் பேருந்துகள் இயக்கம்: பயணிகளுக்கு என்னென்ன நிபந்தனைகள்?

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (07:00 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் அதாவது செப்டம்பர் 1 முதல் மாவட்டத்திற்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து இயக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில் பயணிகள் மற்றும் ஓட்டுனர், நடத்துனருக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
 
பேருந்துகளில் அதிகபட்சமாக மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
 
பயணிகள் இருக்கை மற்றும் நிற்பதற்கான இடங்களில் தனிநபர் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படும்.  
 
பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயன்படுத்த வேண்டும்
 
பயணிகள் ஒருவருக்கொருவர் உடல் ரீதியான தொடர்புகளை தவிர்க்க வேண்டும்
 
ஒவ்வொரு முறை பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். 
 
மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்படுவர். 
 
பேருந்தில் ஏறி இறங்கும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.  
 
அனைத்து பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது பணியை துவக்கும் முன்பு தினசரி உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். 
 
பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படும். 
 
பேருந்தில் பயணிகளுக்காக சானிடைசர் வைக்கப்படும்
 
இவ்வாறு போக்குவரத்து அதிகாரிகள் கூறினார்கள்
 

தொடர்புடைய செய்திகள்

புனே கார் விபத்து.. சிறுவனின் தாத்தா அதிரடி கைது.. என்ன காரணம்?

கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி..!

ஜெயலலிதாவை 'இந்துத்துவா தலைவர்' என குறிப்பிடுவதா? அண்ணாமலைக்கு ஜெயகுமார் கண்டனம்..!

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலங்கையை எச்சரிக்க வேண்டும்.! மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!!!

விமான நிலைய சாலையில் பொதுமக்கள் சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு மாநகராட்சி அதிகாரிகள் சமரச நடவடிக்கையடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது!

அடுத்த கட்டுரையில்
Show comments