Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை பத்தி தெரியணும்னா என் புக்க படிங்க! – ஆஃப் செய்த அண்ணாமலை!

என்னை பத்தி தெரியணும்னா என் புக்க படிங்க! – ஆஃப் செய்த அண்ணாமலை!
, ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (16:24 IST)
சமீபத்தில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் தனது பதவியை துறந்து பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றிப்பெறுவதற்கு ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் பின்னணியில் உதவியதாய் சிலர் சமூக வலைதளங்களில் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை தான் எந்த பின்னணியும் இல்லாமல் சுயமாக படித்து ஐபிஎஸ் பதவியை அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பலர் பேசிவருவது பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,” உங்களது கேள்விகளுக்கு விரைவில் வெளியாகவுள்ள எனது புத்தகம் பதிலளிக்கும்” என கூறியுள்ளார்.

எனவே விரைவில் அண்ணாமலை தனது சுயசரிசை அல்லது அரசியல் நிலைபாடு குறித்த புத்தகம் ஒன்றை எழுதுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டம் வாங்கி தறேன் வா ராஜா; கடத்தப்பட்ட குழந்தை! – 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!