இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (08:49 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நல்ல மழை பெய்தது என்பதும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியதால் வரும் ஆண்டு கோடையில் தண்ணீர் கஷ்டம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தற்போது திடீரென மீண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது 
 
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்த அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 11 வரை ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments