Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்!

Advertiesment
10ஆம் வகுப்பு
இன்று பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று காலை முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
 
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று காலை முதல் மாணவர்கள் தங்களுடைய பிறந்த தேதி மற்றும் பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்தால் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த மதிப்பெண் பட்டியலை வைத்து பதினோராம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சமீபத்தில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வெளியானதை அடுத்து இன்று பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம்!