Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Advertiesment
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
, வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (20:32 IST)
சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்ட நிலையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை டவுன்லோட் செய்வது குறித்த அறிவிப்பை சற்று முன்னர் தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்  www.dge.tn.gov.in- என்ற இணையதளத்தில் மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் தற்காலிக மதிப்பெண்களை டவுன்லோட் செய்து விடலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இந்த மதிப்பெண் பட்டியலை ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயரும்: ப சிதம்பரம்