இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் தொல்லியல் துறை கண்காணிப்பில் உள்ள சுற்றுலா பகுதிகளில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி வளர்ச்சியை கருதுகோளாக கொண்டாடப்படும் இந்த நாளில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சர்வதேச பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் அர்ஜுன தபசு, வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை இலவசமாக காணலாம் என கூறப்பட்டுள்ளது. அதுபோல புதுக்கோட்டையில் வரலாற்று சிறப்புமிக்க சமண அடையாளமான சித்தன்னவாசல் குகை, சமண படுக்கைகள் ஆகியவற்றை காணவும் பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளிலும் இலவச அனுமதி அளிக்கப்படுகிறது.