தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் ஆறாம் கட்ட ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 1முதல் இயல்பு நிலை திரும்புமா? அல்லது தளங்களுடன் கூடிய ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது
இந்த நிலையில் ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் சென்னையில் பேருந்துகள் ஓட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது
இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் கலந்தாலோசித்த பின்னர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 1முதல் பேருந்துகள் ஓட வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சென்னை மக்களுக்கு பேருந்து வசதி கிடைக்காது என்று வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் சென்னை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது