மேற்குவங்கம் மாநிலத்தில் ஆக.31ஆம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இருப்பினும் ஆகஸ்ட் 31 வரை வாரத்தில் 2 நாட்கள் ஊரடங்கு அமல் என்று கூறியுள்ளார். இதனால் அம்மாநில மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். மேலும் ஆக. 1 பக்ரீத் தினத்தில் ஊரடங்கு இல்லை எனவும் அவர் அறிவிப்பு செய்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழகம் உள்பட பிற மாநிலங்களும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக முதல்வர் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்