Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கருத்து பாராட்டுக்குரியது - ஹேச் . ராஜா

Advertiesment
நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கருத்து பாராட்டுக்குரியது - ஹேச் . ராஜா
, புதன், 5 பிப்ரவரி 2020 (19:29 IST)
குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள கருத்துக்கு எதிர்ப்புகள் உருவாகியுள்ள சூழலில் அதனை ஆதரித்து பேசியுள்ளார் எச்.ராஜா.
 
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் குடியுரிமை சட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நாட்டுக்கு குடியுரிமை சட்டம் அவசியம் என்று பேசியுள்ளார். மேலும் இந்த சட்டத்தால் இந்திய குடிமக்கள் யாரும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள் என்று அரசு விளக்கமாக கூறியுள்ளபோதும் சிலர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அவரது இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேசிய தமிழக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ”ரஜினிகாந்த் தவறாக எதுவும் பேசவில்லை. குடியுரிமை சட்டத்தின் தேவை புரிந்து சரியாக பேசியிருக்கிறார். இதனால் யார் குடியுரிமையும் பறிக்கப்பட போவதில்லை. பிரிவினைக்கு முந்தைய நிலைமையை கொண்டு வருவதற்காக எதிர்கட்சிகள் போராட்டங்கள் வாயிலாக சதி திட்டம் செய்கின்றன. இதனை ரஜினிகாந்த் புரிந்து கொண்டு பேசியிருப்பது பாராட்டத்தக்க விஷயம்” என கூறியிருந்தார்.
 
இந்த நிலையில், ஹெச்,ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கருத்து பாராட்டுக்குரியது என தெரிவித்து ஒரு வீடியோவை அதில் பதிவிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி கருத்துக்கு இஸ்லாம் அமைப்பு வரவேற்பு!