Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1.77 கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி-சேலை.. எப்போது வழங்கப்படும்? அமைச்சர் தகவல்..!

1.77 கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி-சேலை.. எப்போது வழங்கப்படும்? அமைச்சர் தகவல்..!

Siva

, ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (08:32 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1.77 கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலை வரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை ஒட்டி தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்கிவரும் நிலையில், கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வந்ததால் வேட்டி சேலை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது என்றும், இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்குள் நியாய விலை கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு முழுமையாக குடும்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுமுறை விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 15 ரகங்களில் சேலைகள் வழங்கப்பட உள்ளதாகவும், துணிகளில் சிறு அளவில் பாலிஸ்டர் கலந்து இருந்தாலும் முழுவதும் தரமானதாக இருக்கும் என்றும், மேலும் ஐந்து வகை வேட்டிகளையும்  வழங்க உள்ளோம் என்றும் அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

இந்த ஆட்சியை போல எந்த ஆட்சியில் இலவச வீட்டு சேலைகள் தரமானதாக வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். மேலும், நூல் விலையில் உயர்வு இல்லை என்றும், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் எடுத்த கோரிக்கையை ஏற்று செஸ் வரி நீக்கப்பட்டதாகவும், அதுமட்டுமின்றி நூற்பாலைகளுக்கு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியுடன் தொழிலதிபர் தற்கொலை.. அமலாக்கத்துறை கொடுத்த நெருக்கடி காரணமா?