Publish Date: Wed, 17 May 2023 (18:28 IST)
Updated Date: Wed, 17 May 2023 (18:30 IST)
சென்னை மெட்ரோ ரயில் நிலங்களில் சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு இலவச பயணத்திற்கான புரோமோஷனல் டிக்கெட் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றி வசிப்பவர்கள் இலவசமாக பயணிக்க புரமோஷன் டிக்கெட் வழங்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மெட்ரோ மேலாண் இயக்குனர் சக்தி தெரிவித்துள்ளார்
சென்னை மெட்ரோ நிலையங்களுக்கு 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கக்கூடிய மக்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பயணம் செய்யக்கூடிய இலவச டிக்கெட் மற்றும் கட்டண சலுகை டிக்கெட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மெட்ரோ நிர்வாகத்திற்கு லாபமும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விரைவில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோவின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.