Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியார் மருமகள் ஒருவருக்கொருவர் ஊட்டினால் உணவு இலவசம்.. ஈரோடு உணவகம் அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 7 மார்ச் 2024 (11:02 IST)
மாமியார் மருமகள் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட்டால் அவர்கள் சாப்பிடும் உணவு இலவசம் என ஈரோடு பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது அடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்து அந்த உணவக உரிமையாளர் கூறிய போது மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதால், எங்கள் உணவகத்திற்கு வரும் மாமியார் மருமகள்கள் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிக்கொண்டால் அவர்கள் சாப்பிடும் உணவு இலவசம் என்று அறிவித்துள்ளோம். 
 
இந்த அறிவிப்புக்கு ஈரோடு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, ஏராளமான மாமியார் மருமகன்கள் எங்கள் உணவகத்திற்கு  வந்து சாப்பிட்டு ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொள்கின்றனர். மகளிர் தினத்தில் மாமியார் மருமகள் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறையை நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த திட்டத்திற்கு பெண்களிடம் இருந்து ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.’
 
 இந்த உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு செல்லும் மாமியார் மருமகள்கள் இந்த திட்டம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்றும், இதே போல் மற்ற உணவகத்திலும் இதேபோன்று திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments